2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பெண்களுக்கிடையில் மோதல்: ஐவர் வைத்தியசாலையில்

Kogilavani   / 2014 ஜூலை 21 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

புன்னாலைக் கட்டுவன் மாத்தளோடையைச் சேர்ந்த இரு பெண்கள் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஐந்து பெண்கள் படுகாயமடைந்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (20) மாலை அனுமதிக்கப்பட்டள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

மகாலிங்கம் செல்வராணி (வயது 57), மகாலிங்கம் பகிந்தா (வயது 30), சசிதரன்  ஆனந்தி (வயது 41), குமரேசன் ஜெனித்தா (வயது 30), மற்றும் சின்னராசா ஞானேஸ்வரி (வயது 60) ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் அவ்வூரைச் சேர்ந்த பெண்ணொருவரைக் காதலித்து பெண்ணைத் தூக்கிச் சென்றமை தொடர்பில் இரு பெண்கள் குழுக்களுக்கிடையில் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இவ்வாறு கைகலப்பாக மாறியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .