2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வெவ்வேறு விபத்துக்களில் நால்வர் காயம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 21 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணத்தில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) மாலை இடம்பெற்ற வெவ்வேறு 04 விபத்துக்களில் படுகாயமடைந்த  04 பேர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுன்னாகம், மயிலணிப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் குறுக்காக  மோட்டார் சைக்கிளை செலுத்த முற்பட்டபோது,  சைக்கிளில் சென்றுகொண்டிருந்த மல்லாகம் மகா வித்தியாலய ஆசிரியையான  எஸ்.தர்சினி (வயது 38)   நிலை தடுமாறி விழுந்து படுகாயமடைந்ததாக  சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தை தொடர்ந்து, மேற்படி மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.  இதன்போது,  இருவர் தப்பியோடியதாகவும்  பொலிஸார் கூறினர்.

மேற்படி மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், ஆசிரியையின் கழுத்திலிருந்த தங்கநகைகளை அபகரிக்கும் நோக்கில், குறுக்காக மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளனரா என்பது தொடர்பில் விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது இவ்வாறிருக்க,  குப்பிளான் பகுதியில்  சைக்கிளில் சென்றுகொண்டிருந்த  ஊரெழு வடக்கைச் சேர்ந்த  மாதன் சிவசம்பு (வயது 60) என்பவர்  நிலை தடுமாறி விழுந்ததால் படுகாயமடைந்தார்.

சுன்னாகம் பகுதியில் மோட்டார் சைக்கிளும் சைக்கிளும்  நேருக்குநேர் மோதியதால் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கோண்டாவிலைச்  சேர்ந்த மகாலிங்கம் ஜெயந்திரன் (வயது 55)  படுகாயமடைந்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

மல்லாகம் நீதிமன்றத்துக்கு முன் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த  அளவெட்டியைச் சேர்ந்த  வேலுப்பிள்ளை பூபாலசிங்கம் (வயது 67)  என்பவர் நாய் குறுக்காக சென்றதால் நிலை தடுமாறி விழுந்து  படுகாயமடைந்ததார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .