2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சாவுடன் பெண் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூலை 21 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நாவாந்துறையைச் சேர்ந்த 37 வயதான  பெண்ணொருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இரவு கைதுசெய்ததாக யாழ்ப்பாணப் பொலிஸார் இன்று திங்கட்கிழமை (21) தெரிவித்தனர்.

அத்துடன், இந்தப் பெண்ணிடமிருந்து 25 கிராம் கஞ்சாவை கைப்பற்றியதாகவும்  பொலிஸார் கூறினர்.

அண்மைக்காலமாக மத்திய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில்  இந்தப் பெண் நடமாடி வந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தப் பெண்ணிடம் விரிவான  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .