2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நாய் குரைப்பதால், சேவல் கூவுவதால் தொந்தரவு என பொலிஸில் முறைப்பாடு

Menaka Mookandi   / 2014 ஜூலை 21 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பக்கத்து வீட்டு நாய் குரைப்பதாலும் சேவல் கூவுவதாலும் தனக்கு தொந்தரவு ஏற்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவருக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.

யாழ்ப்பாணம், நாவலர் வீதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த குடும்பஸ்தர், அப்பிரதேச கிராம சேவகராவார். 

இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, குறித்த அமெரிக்கரையும் கிராம சேவகரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துள்ள பொலிஸார், வீட்டிலுள்ள நாயை அங்கிருந்து அகற்றுமாறு கிராம சேவகருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதன்போது, அங்கு நின்றிருந்த கிராம சேவகரின் மனைவி, 'தங்களது வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதாயின், தங்கள் நாயை அங்கிருந்து அகற்றுவதாக' கூறினார்.

அத்துடன், 'நாயை குரைக்குமாறும் சேவலை கூவுமாறும் தாங்கள் அறிவுறுத்தவில்லை' என்றும் கிராம சேவகரின் மனைவி மேலும் குறிப்பிட்டுள்ளார். 

எவ்வாறாயினும், எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதிக்கு முன்னர் நாயை அங்கிருந்து அகற்றுமாறு பொலிஸார், மேற்படி கிராம சேவகருக்கு அறிவுறுத்தினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .