2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வெற்றிலைக்கேணியில் நிலஅளவை மேற்கொள்ளும் முயற்சி தடுப்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 21 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெகநாதன்


யாழ்., மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெற்றிலைக்கேணிப் பிரதேசத்திலுள்ள சுமார் 800 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் நிலஅளவை செய்யும் பணிகள் பொதுமக்களின் எதிர்ப்பினால் இன்று திங்கட்கிழமை (21) கைவிடப்பட்டன.

மேற்படி பிரதேசத்தில் புல்லாவெளி, தட்டங்கோடு, வயல்விடுதி, மண்டலாய் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 800 ஏக்கர் காணிகளை நிலஅளவை செய்வதற்காக நிலஅளவை திணைக்களத்தின் அதிகாரிகள் அங்கு சென்றனர்.

இருந்தும், அப்பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள், காணி அளவீட்டு நடவடிக்கைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள்.  இதனால், காணி அளவீடு செய்யும் நடவடிக்கையினைக் கைவிட்டு நிலஅளவையாளர் திரும்பிச் சென்றனர்.

பொதுமக்களுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான அரியகுட்டி பரஞ்சோதி, சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை, வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் கந்தசாமி சதீஸ் உள்ளிட்டவர்களும் இணைந்து அளவீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியிருந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .