2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இலைகளை போட்டு மீன்பிடித்த ஐவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூலை 22 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறையில் ஒரு வகையான  இலைகளை போட்டு மீன்பிடித்ததாகக் கூறப்படும் 05 பேரை பருத்தித்துறை முனைக் கடற்பகுதியில்  கடற்படையினரும் முனை மீனவர் சங்கமும் இணைந்து திங்கட்கிழமை (21) கைதுசெய்து தம்மிடம் ஒப்படைத்ததாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து 03 படகுகளை கைப்பற்றியதாகவும்  பொலிஸார் கூறினர்.

இந்தக் கடற்பரப்பில் ஒருவகையான இலைகளை போட்டு கணவாய் பிடிப்பதில் சிலர் ஈடுபடுவதாக  முனை மீனவர் சங்கத்துக்கு தகவல் கிடைத்தது.  இதனைத் தொடர்ந்து கடற்படையினரின் உதவியுடன்  முனை மீனவர் சங்கத்தை சேர்ந்த  இருவர்  அங்கு சென்றனர். 

இதன்போது, இலைகளை போட்டு மீன்பிடித்ததாகக் கூறப்படும் 07 பேரை கைதுசெய்ய முயன்ற வேளை இருவர் தப்பியோடியுள்ளளனர்.  இந்த நிலையில், ஏனைய 05 பேரும்  கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த 05 பேரையும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .