2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஆசைப்பிள்ளையேற்றத்தில் காணி அளவீடு கைவிடப்பட்டது

Menaka Mookandi   / 2014 ஜூலை 22 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


யாழ்., கொடிகாமம், மிருசுவில், ஆசைப்பிள்ளையேற்றம் பகுதியில் பெண்ணொருவருக்குச் சொந்தமான 50 ஏக்கர் காணிகளை அளவீடு செய்ய நிலஅளவைத் திணைக்கள அலுவலர்களினால் நிலஅளவை செய்ய இன்று திங்கட்கிழமை (22) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பெண்ணின் உறவினர்களின் போராட்டத்தினால் கைவிடப்பட்டுள்ளது.

மேற்படி பகுதியிலுள்ள காணிகளை அளவீடு செய்வதற்கு நிலஅளவையாளர்கள் வருகை தருவதாக கிராம அலுவலர் ஊடாகப் மேற்படி பெண்ணிற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டது.  இதனையடுத்து, அப்பகுதிக்கு உறவினர்களுடன் சென்ற பெண், காணி அளவீட்டிற்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்.

அவர்களுக்குத் துணையான வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த, கொடிகாமம் பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி, உங்களுக்குச் சொந்தமான காணியினை சுவீகரிக்கும் நோக்கில் அளவீடு செய்ய முயற்சிக்கின்றார்கள் என கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யும்படி கூறினார். அதற்கிணங்க முறைப்பாட்டினைப் பதிவு செய்யவுள்ளதாக மேற்படி பெண் தெரிவித்தார்.

மேற்படி காணியில் 40 ஏக்கர் காணியில் தற்போது 52 ஆவது படைப்பிரிவில் இராணுவம் காணப்படுகின்றது. அத்துடன் மிகுதி 10 ஏக்கரையும் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளனர். மேற்படி 50 ஏக்கர் காணிகளையும் தனது 8 பிள்ளைகளுக்கு மேற்படி பெண் பிரித்து எழுதி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .