2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பிறந்த நாளன்று சடலமான பல்கலை மாணவன்; மரணிப்பதாக முகப்புத்தகத்தில் அறிவிப்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 23 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த், செல்வநாயகம் கபிலன் 


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், கரவெட்டி அல்வாய் தெற்கிலுள்ள அவரது வீட்டிலிருந்து இன்று புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கலைப்பீட முதலாம் வருட மாணவனான நாகராசா சுதாகரன் (வயது 21) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று இந்த மாணவனின் பிறந்த நாளாகும். இந்நிலையில், பிறந்தநாளில் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக அம்மாணவர், தனது முகப்புத்தகத்தில் (பேஸ்புக்) குறிப்பொன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.

இதன் பின்னரே, அம்மாணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவரது சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில், நெல்லியடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முகப்புத்தகத்தில் தற்கொலை செய்வதாகப் பதிவிட்டபின் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அடிக்கடி இடம்பெறுகின்றன.

அண்மைக்காலங்களில் மூவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவர்களில்இருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • thilak Wednesday, 23 July 2014 09:14 AM

    மென்டல்

    Reply : 0       0

    George hentry Wednesday, 23 July 2014 03:53 PM

    இந்த முட்டாள்கள் சாகட்டும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .