2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

துவிச்சக்கரவண்டிகள் திருட்டு : இரண்டாவது சந்தேகநபர் கைது

George   / 2014 ஜூலை 23 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். மாவட்டத்தின் இளவாலை, சுன்னாகம் மற்றும் அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளிற்குட்பட்ட பகுதிகளில் துவிச்சக்கரவண்டிகளைத் திருடிவந்த உரும்பிராய் மேற்கினைச் சேர்ந்த மேலும் ஒரு சந்தேகநபரை நேற்று செவ்வாய்க்கிழமை (22) இரவு கைது செய்ததாக அச்சுவேலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் எஸ்.என்.கே.ஜெயசிங்க புதன்கிழமை (23) தெரிவித்தார்.

மேற்படி குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே சுன்னாகம் சூரவரத்தையினைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் கடந்த 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இரண்டாவது நபரும் கைது செய்யப்பட்டதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

முதலாவது சந்தேக நபர், தான் திருடிய துவிச்சக்கரவண்டிகளில் இரண்டினை விற்பனை செய்துகொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 9 துவிச்சக்கரவண்டிகள் கைப்பற்றப்பட்டிருந்ததாகவும் பொறுப்பதிகாரி கூறினார்.

இதே வேளை, இரண்டாவது சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொறுப்பதிகாரி மேலும் குறிப்பிட்டார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .