2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

முத்தையன்கட்டு குளத்தின் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு

George   / 2014 ஜூலை 23 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டம் முத்தையன்கட்டு குளத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு மத்திய அரசின் அணைக்கட்டுக்களைப் பாதுகாக்கும் நிதியத்தின் கீழ் 600 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாக முத்தையன்கட்டு நீர்ப்பாசனத் திணைக்களம் புதன்கிழமை (23) தெரிவித்தது.

முத்தையன்கட்டுக்குளத்தின் குளக்கட்டு, நீர்ப்பாசன வாய்க்கால்கள், ஆகியன கடந்த 30 வருடங்களாக புனரமைப்புச் செய்யப்படாத நிலையில் சேதமடைந்து காணப்படுகின்றன.

இவற்றினை புனர்நிர்மாணம் செய்வதற்கு 950 மில்லியன் ரூபா நிதி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததுடன், அதற்கான நிதி இதுவரையில் கிடைக்கப்பெறாத நிலையில் இருந்தது.

இந்நிலையில், குளத்தின் குளக்கட்டினை புனரமைக்கும் பொருட்டு மத்திய அரசின் அணைக்கட்டுக்களைப் பாதுகாக்கும் நிதியத்தின் கீழ் 600 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனைக் கொண்டு வெகு விரைவில் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்தது.

முத்தையன்கட்டு குளத்தின் கீழ், ஏற்றுநீர்ப்பாசனச் செய்கை மற்றும் நெற்செய்கையென 4200 இற்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டடு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .