2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கலாச்சார ஆடைகள் அணிந்து நல்லூருக்கு வருமாறு கோரிக்கை

George   / 2014 ஜூலை 23 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, பொ.சோபிகா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள் இந்துக் கலாச்சார ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து ஆலய தரிசனத்திற்கு வாருங்கள் என யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா இன்று புதன்கிழமை (23) தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான சகல ஏற்பாடுகளையும் யாழ். மாநகர சபை வழமை போன்று மக்களின் கருத்தினையும் உள்வாங்கி மேற்கொண்டுள்ளது.

அத்துடன், ஆலயத்தில் இடம்பெறும் திருட்டுக்கள், தொல்லைகளை தவிர்த்து பொதுமக்கள் சுதந்திரமாக வழிபாடுகளை மேற்கொள்வதற்காக பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .