2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நல்லூர் மஹோற்சவத்தையொட்டிய பண்ணிசைப் போட்டி

Thipaan   / 2014 ஜூலை 23 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, பொ.சோபிகா

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவத்தினை முன்னிட்டு, யாழ். மாநகர சபையின் சைவசமய விவகாரக்குழுவினால் எதிர்வரும் 30ஆம் திகதி நாவலர் கலாச்சார மண்டபத்தில் பண்ணிசைப் போட்டி நடைபெறவுள்ளதாக யாழ். மாநகர சபை சைவசமய விவகாரக்குழு புதன்கிழமை (23) தெரிவித்தது.

பாடசாலை மாணவர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பண்ணிசைப் போட்டி நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கீழ்ப்பிரிவு, மத்திய பிரிவு மற்றும் மேற்பிரிவு என மூன்று பிரிவுகளாக மாணவர்கள் வகைப்பபடுத்தப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
மாணவர்கள் பாடப்படவேண்டிய தேவாரப் பாடல்கள், மேற்படி போட்டிக்காக விண்ணப்பத்திருந்த மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்தக்குழு தெரிவித்தது.

இந்தப் பண்ணிசைப் போட்டிகளில் முதலாம் இடத்திற்கு 10 ஆயிரம் ரூபாவும், இரண்டாமிடத்திற்கு 7 ஆயிரத்து 500 ரூபாவும், மூன்றாமிடத்திற்கு 5 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும் என சைவசமய விவகாரக்குழு மேலும் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .