2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மாட்டிறைச்சியுடன் நால்வர் கைது

Menaka Mookandi   / 2014 ஜூலை 24 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்., கொடிகாமம், விடத்தல் பளைப் பகுதியில் திருடிய மாட்டினை இறைச்சியாக்கி, அதனை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்த சந்தேகத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வரை கொடிகாமம் பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை (24) காலையில் கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேகநபர்களிடமிருந்து 30 கிலோ இறைச்சியினையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டடி, ஐந்து சந்தி, பழம்வீதி ஆகிய இடங்களைச் சேர்ந்த 18, 19, 22, மற்றும் 25 வயதுடைய நான்கு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி சந்தேகநபர்கள், விடத்தல் பளைப் பகுதியில் மேய்ச்சலுக்கு நின்றிருந்த மாட்டினை திருடி அதனை அப்பகுதியிலுள்ள வயல் வெளியில் வைத்து இறைச்சியாக்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்த விடயத்தினை அப்பகுதி பொதுமக்கள் கொடிகாமம் பொலிஸாரிற்குத் தெரியப்படுத்தியதை அடுத்து, படி வாகனத்தின் இலக்கத்தினை வைத்து, சந்தேகநபர்கள் நால்வரையும் கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .