2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நிதி சேகரிக்கச் சென்றவர்களால் தொலைபேசி திருட்டு

Menaka Mookandi   / 2014 ஜூலை 24 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்., அச்சுவேலி தென்மூலைப் பகுதியிலுள்ள வீடொன்றில் பாடசாலைக்கென நிதி சேகரிப்பதாகக் கூறிச் சென்றவர்கள் சிலரால், வீட்டின் முன் மேசையில் வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசி, திருடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வீட்டு உரிமையாளரால், பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (23) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்திருந்த இருவர் தாங்கள் புத்தூரிருல்ல பாடசாலையொன்றுக்காக நிதி சேகரிப்பதற்காக வந்ததாகக் கூறி நிதியுதவி கேட்டுள்ளனர். வீட்டுக்காரர் நிதியுதவி வழங்கவே, குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர்.

தண்ணீர் எடுப்பதற்காக சமையல் அறைக்குச் சென்றிருந்த வேளையில், மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசியினை எடுத்துக்கொண்டு இரண்டு நபர்களும் தலைமறைவாகியுள்ளனர்.

மேற்படி இரண்டு நபர்களும், மேற்படி வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டில் தெல்லிப்பளை கல்லூரியொன்றுக்கு நிதி சேகரிப்பதாகக்கூறி நிதி வசூலித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக பொய்யான காரணங்கள் கூறி நிதி வசூலிக்கும் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. ஆலயங்களுக்கு கட்டிட நிதி, மருத்துவச் செலவு, பாடசாலைக்கு நிதி போன்ற பல பொய் காரணங்களைக் கூறி பணம் வசூலிக்கும் செயற்பாடுகளில் ஆசாமிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு, புன்னாலைக்கட்டுவன் வடக்கு அருள்மிகு ஞானவைரவர் ஆலயத்தின் கட்டிட நிதிக்கு நிதி சேகரிப்பதாகக் கூறி போலி டிக்கட்டுகளை அரியாலை பகுதியில் விற்பனை செய்து வந்த ஊரெழுப் பகுதியினைச் சேர்ந்த மூவர் யாழ்ப்பாணப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .