2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

திறக்கப்படாமல் இருக்கும் பாடசாலை

Menaka Mookandi   / 2014 ஜூலை 24 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


யாழ்ப்பாணம், வலி.வடக்குப் பிரதேசத்திற்குட்பட்ட மாவிட்டபுரம் தெற்கு அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையானது 43 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யப்பட்ட போதும் இன்று வரையிலும் திறந்து வைக்கப்படாத நிலையில் பாடசாலையின் கட்டிடங்கள் பாழடைந்து செல்வதாக வலி.வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் இன்று வியாழக்கிழமை (24) தெரிவித்தார்.

இது குறித்து சுகிர்தன் மேலும் தெரிவிக்கையில்,

மாவிட்டபுரம் பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்ததை அடுத்து மேற்படி பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளும் கைவிடப்பட்டன. தொடர்ந்து 2010ஆம் ஆண்டு இப்பகுதியில் மக்கள் மீள்குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட்ட பின்னர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் துரித மீட்சித் திட்டத்தின் கீழ் சுமார் 43 இலட்சம் ரூபா செலவில் மேற்படி பாடசாலைக் கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் 2011 ஆரம்பிக்கப்பட்டு அவ்வருடமே முடிவடைந்தன.

எனினும் மேற்படி பாடசாலை இதுவரையில் திறந்து வைக்கப்படவில்லை என்பதுடன் பாடசாலைக்கான அதிபர், ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை. இதனால், இப்பகுதியினைச் சேர்ந்த மாணவர்கள் தூர இடங்களிலுள்ள பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கற்று வருகின்றனர்.

மேலும், பாடசாலைக் கட்டிடத்தில் உள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளதுடன், கடந்த வாரம் அங்கு பொருத்தப்பட்டிருந்த நீர் இறைக்கும் இயந்திரமும் திருட்டுப் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கடந்த மே 26ஆம் திகதி, மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் சுட்டிக்காட்டியிருந்ததாக சுகிர்தன் மேலும் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .