2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கடையில் தீ விபத்து

Menaka Mookandi   / 2014 ஜூலை 24 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ்.நீர்வேலி வடக்கு சிறுப்பிட்டிப் பகுதியிலுள்ள கடையொன்றில் இன்று வியாழக்கிழமை (24) ஏற்பட்ட தீ விபத்தில் கடையிலிருந்த 5000 ரூபாய் பெறுமதியான காகிதாதிகள் எரிந்துள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மின்னொழுக்கினால் ஏற்பட்டிருந்த இந்தத் தீ விபத்தில், உரிமையாளர் சாதுரியமாகச் செயற்பட்டு மின் விநியோகத்தினைத் துண்டித்ததின் மூலம் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால், கடையில் இருந்த பல இலட்சம் ரூபாய்  பெறுமதியான பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .