2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் மன்னர்களுக்கு மரியாதை

Menaka Mookandi   / 2014 ஜூலை 24 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா, யோ.வித்தியா, எம்.றொசாந்த்

யாழ்ப்பாண மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றியுள்ள மூன்று வளைவுகளிலும் திராவிட கலை சார்ந்து யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னர்களான பண்டாரவன்னியன், சங்கிலியன் மற்றும் பரராஜசேகரம் ஆகியோரின் சிலைகள் அமைக்கப்படவுள்ளதாக முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா இன்று வியாழக்கிழமை (24) தெரிவித்தார்.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின் நிதியுதவியுடன் இச்சிலைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த மூன்று சிலைகள் எதிர்வரும் 1ஆம் திகதியன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தச் சிலைகளை சிற்பக் கலைஞர் செல்லையா சிவப்பிரகாசம் வடிவமைத்து வருவதாகவும் முதல்வர் மேலும் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .