2025 ஜூலை 07, திங்கட்கிழமை

யாழில் நுளம்பு அழிப்பு சோதனை

Menaka Mookandi   / 2014 ஜூலை 24 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

சண்டிலிப்பாய் சுகாதார வைத்தியதிகாரி பணிமனையினால், யாழ்ப்பாணம், வலி.தென்மேற்குப் பிரதேசத்திற்குட்பட்ட 4 ஆயிரத்து 980 வீடுகள் நுளம்பு அழிப்புச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சண்டிலிப்பாய் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி இன்று வியாழக்கிழமை (24) தெரிவித்தார்.

இதன்போது, 19 இடங்களில் நுளம்புகள் பரவுக்கூடிய சாத்தியக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அங்கு பெருகியிருந்த குடம்பிகள் அழிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வடமாகாண சுகாதார அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நுளம்புக்கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டே, இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பிரதேசத்திலுள்ள 41 பாடசாலைகள் மற்றும் 32 நிறுவனங்கள் ஆகியவற்றிலும் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .