2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வவுனியாவில் சிறுவர் கழகங்கள் உருவாக்கம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 25 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தில் சிறுவர்களின் இயலளவை கட்டியெழுப்பும் நோக்குடன் சர்வோதய நிறுவனத்தினால் சிறுவர் கழகமொன்று உருவாக்கப்பட்டு வருகின்றது.

பிள்ளைகளுக்கு பாதுகாப்பான கற்றல் நிலையமும் பிள்ளைகளின் பாதுகாப்புக்காக சமூகத்தினரை ஈடுபடுத்தலும் எனும் செயற்திட்டத்தின் கீழ் கற்றல் இடர்பாடுகளுடன் காணப்படும்; சிறுவர்களை வளப்படுத்தும் நோக்குடன் இந்த சிறுவர் கழகங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக சர்வோதயத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் எஸ். உதயகுமாரன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் கள்ளிக்குளம், கருப்பனிச்சான்குளம், மகாறம்பைக்குளம், ஸ்ரீராமபுரம், மதுராநகர் ஆகிய கிராமங்களிலேயே இக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், இக்கிராமங்களில் சிறுவர்களுக்கான ஆக்கத்திறன் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் சிறுவர்களின் தலைமைத்துவ பண்பை மேம்படுத்தல் செயற்பாடும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில் நேற்று மாலை (24)  ஸ்ரீராமபுரம் கிராமத்தில் சிறுவர் கழகம் உருவாக்கல் செயற்பாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு வளவாளராக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர் ஜெ.ஜெயக்கெனடி கலந்து, சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தெளிவூட்டல் வளப்பகிர்வை வழங்கினார்.

அத்துடன், சிறுவர்கள் தம்மை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்ற விளங்கங்களை இத்திட்டத்தின் மாகாண இணைப்பாளர் எஸ்.சுவேந்தன் வளங்கியிருந்ததுடன் திட்டத்தின் பயிற்சி இணைப்பாளர் கோ.ரூபகாந் மற்றும் திட்ட இணைப்பாளர் எஸ்.நந்தினி ஆகியோர் இணைந்து சிறுவர் கழகததுக்கான நிர்வாகத்தை தெரிவு செய்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .