2025 ஜூலை 07, திங்கட்கிழமை

காரைநகர் சிறுமி துஷ்பிரயோக வழக்கு ஒத்திவைப்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 25 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், பொ.சோபிகா, யோ.வித்தியா

யாழ்.காரைநகர், ஊரிப் பகுதியில் கடற்படை சிப்பாயினால் 11 வயதுச் சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கினை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்க, யாழ்.குருநகர் சிறுவர் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் மு.திருநாவுக்கரசு இன்று வெள்ளிக்கிழமை (25) உத்தரவிட்டார்.

மேற்படி வழக்கு இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 7 கடற்படை சிப்பாய்களும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

எனினும் சிறுமியும், சிறுமி சார்பாக எவரும் மன்றில் ஆஜராகியிருக்கவில்லை. இதனையடுத்து, மேற்படி வழக்கினை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு பதில் நீதவான் ஒத்திவைத்தார்.

பாடசாலை செல்லும் இச்சிறுமியினை ஏலாரை கடற்படை முகாமிற்குள் அழைத்துச் சென்று 11 நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சிறுமியின் பெற்றோர், கடந்த 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

இந்த முறைப்பாட்டிற்கமைய ஊர்காவற்றுறைப் பொலிஸார் யாழ்.சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .