2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்; இளைஞனுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 ஜூலை 25 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்., இளவாலை, பனிப்புலம் பகுதியினைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியினை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அராலி வீதி சுழிபுரத்தினைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா வியாழக்கிழமை (24) இரவு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், மேற்படி சிறுமியினை கைதடிச் சிறுவர் இல்லத்தில் ஒப்படைத்துப் பராமரிக்கும்படியும் நீதவான் பொலிஸாரிற்கு உத்தரவிட்டுள்ளார்.

இது பற்றித் தெரியவருவதாவது,
 
பனிப்புலம் பகுதியினைச் சேர்ந்த மேற்படி 15 வயதுச் சிறுமிக்கும் மேற்படி சந்தேக நபருக்கும் நயினாதீவு அம்மன் ஆலயத்திற்குச் சென்றிருந்த தருணத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால், இருவரும் பரஸ்பரம் தொலைபேசி இலக்கங்களைப் பகிர்ந்து, காதல் வளர்த்து கடந்த 19ஆம் திகதி மேற்படி சிறுமியினை பறாளை முருகன் ஆலயத்திற்கு அருகில் அழைத்துச் சென்ற மேற்படி நபர் சிறுமியினை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு, சிறுமியினை வீட்டிற்குச் செல்லும்படி கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

தொடர்ந்து சிறுமி, பஸ் ஏறி யாழ். நகரம் வந்து, நயினாதீவிலுள்ள தனது பாட்டியினைத் தேடிச் சென்றுள்ளார். பாட்டி, அச்சிறுமியை வீட்டுக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். இந்நிலையில், குறித்த சிறுமி, வீட்டுக்குச் செல்லாது தனது நெல்லியடியிலுள்ள நண்பியின் வீட்டிலும் 2 நாட்கள் சென்று தங்கியுள்ளார்.

இந்நிலையில், சிறுமியினைக் காணவில்லையென சிறுமியின் தாயார் கடந்த 19ஆம் திகதி இளவாலைப் பொலிஸ் நிலையத்தின் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். மேற்படி சந்தேகநபருடன் தமது மகள் கதைப்பதினை அறிந்திருந்த, சிறுமியின் பெற்றோர் இளைஞனின் வீட்டிற்குச் சென்று சண்டை பிடித்துள்ளனர்.

தொடர்ந்து, நேற்று வியாழக்கிழமை (24) சிறுமி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்கு நின்றிருந்த ஒருவரின் தொலைபேசியினை வாங்கி தனது காதலனின் தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

இதன்போது, உஷாரடைந்த மேற்படி சந்தேகநபர், வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையம் சென்று, மத்திய பேருந்து நிலையத்தில் சிறுமியொருவர் அநாதரவாக நிற்பதாகவும் அவரை மீட்கும்படியும் கேட்டுள்ளார்.

இதனையடுத்து, இது தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் இளவாலைப் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்ததினை அடுத்து, இளவாலைப் பொலிஸார் முறைப்பாட்டாளரையும் அழைத்துக்கொண்டு, பேருந்து நிலையத்திற்குச் சென்று சிறுமியினை மீட்டனர்.

தொடர்ந்து சிறுமியிடம் விசாரணை செய்த போது, மேற்படி சந்தேகநபர் சிறுமியினை பாலியல் துஷ்பிரயோகம் செய்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சந்தேகநபரைக் கைது செய்த பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (25), சிறுவர் நீதிமன்ற நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்தினர். இதன்போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .