2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கருங்குளவி கொட்டியதில் 9 பேர் பாதிப்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 27 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

பளை, அரசர்கேணி, பெரியதம்பிரான் ஆலயத்தில் நேற்று சனிக்கிழமை (26) ஆடி அமாவாசை தினத்தன்று பொங்கல் வைத்துகொண்டிருந்த  அடியார்களை கருங்குளவி  கொட்டியதில்  ஒன்பது பேர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று பளை வைத்தியசாலை அதிகாரிகள் இன்று (27) தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் பளை, அரசர்கேணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலயத்திலிருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள வேப்பமரத்தில் பாரிய கருங்குளவிக் கூடு இருந்தது. ஆலய வளாகத்தில் பொங்கல் வைத்துகொண்டிருந்த போது அடுப்புகளிலிருந்து மேலெழுந்த  புகையினால் கருங்குளவிக் கூடு கலைந்து குளவி மக்களைத்  கொட்டியதாக தெரிவிக்கப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .