2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பாடசாலை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் மீது வழக்கு தாக்கல் செய்ய முடிவு

Menaka Mookandi   / 2014 ஜூலை 27 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளில் உள்ள சிற்றுண்டிசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் பிரகாரம் அந்த சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் மீது வழக்கு தாக்கல் செய்ய முடிவெடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட நுகர்வோர் அதிகாரசபையின் மாவட்ட இணைப்பாளர் ஜி.சசிகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று (27) கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

நுகர்வோர் பாதுகாப்பின் பிரகாரம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திரவின் வழிகாட்டலில் வவுனியா மாவட்டத்தில் நகர்ப்புறத்தில் உள்ள பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகளில் திடீர் பரிசோதனைகளை நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் கடந்த வாரம் மேற்கொண்டிருந்தனர். இதேபோன்று, மன்னார் மாவட்டத்திலும் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்மூலமாக சில பிரபலமான பாடசாலை சிற்றுண்டிசாலைகளில் பொருட்களின் விலைகளை அதிகரித்து விற்றல், உற்பத்தி திகதியிடப்படாத பொருட்கள் விற்றல், உற்பத்தியாளர் பெயர் முகவரியின்றி பொருட்கள் விற்றல், காலாவதியான பொருட்கள் விற்றல் போன்ற செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து வவுனியா மாவட்டத்தில் 6 பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளுக்கு எதிராகவும் மன்னார் மாவட்டத்தில் ஒரு பாடசாலையின் சிற்றுண்டிசாலைக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .