2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு செயலமர்வு

Menaka Mookandi   / 2014 ஜூலை 27 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


சுங்கத் திணைக்கள அதிகாரிகள் 33 பேருக்கான சுயஆளுமை விருத்தி தொடர்பிலான செயலமர்வு நேற்று சனிக்கிழமை (26) தல்செவன விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

இதன்போது 5 நாட்கள் வதிவிடப் பயிற்சியை நிறைவு செய்த சுங்கத் திணைக்கள அதிகாரிகள் 33 பேருக்கும் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா, சுங்கத் திணைக்கள பொதுப் பணிப்பாளர் பி.விஜயவீர, சுங்கத் திணைக்கள உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு, முதற்தடவையாக யாழில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .