2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது

Menaka Mookandi   / 2014 ஜூலை 27 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்., புத்தூர் வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை நேற்றிரவு (26) யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்து அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸ் அத்தியட்சகர் கே.என்.சி பிரதீப்செனவிரட்ண இன்று தெரிவித்தார்.

குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வீட்டிலிருந்து கொள்ளையடித்துச் சென்ற 14 ¼ பவுண் நகைகளை உருக்கிய நிலையில் யாழ் நகரிலுள்ள கடையொன்றில் விற்பனை செய்தமையும், 1,48000 ரூபா பெறுமதியான கெமரா மற்றும் கைத்தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை ஆவரங்காலிலுள்ள கடையொன்றில் விற்பனை செய்தமையும் தெரியவந்ததையடுத்து அவற்றினைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .