2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நூல்கள் அன்பளிப்பு

George   / 2014 ஜூலை 27 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

மாணவர்களின் ஆங்கில அறிவினை விருத்தி செய்தல் மற்றும் வாசிப்புப் பழக்கத்தினை மேம்படுத்துதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு 5 இலட்சம் ரூபாய்  பெறுமதியான ஒருதொகுதி ஆங்கில நூல்கள், மற்றும் அரிய பல நூல்கள் இங்கிலாந்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தலைவர் ப. இராஜகோபாலன் இன்று (27) தெரிவித்துள்ளார்.

லண்டனில் வசித்து வரும் அளவெட்டியைச் சேர்ந்த பொ.கணேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்களின் இணை நிதிப்பங்களிப்புடன் அளவெட்டியில் உள்ள பாடசாலைகளுக்கென இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அளவெட்டி அபிவிருத்தி மன்ற நிதியாளர் வே.சிவராஜாவிடம் கையளிக்கப்பட்டுள்ள இந்நூல்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (29) மகாஜனசபை மண்டபத்தில் வைத்து பாடசாலைகளிடம் கையளிக்கப்படவுள்ளன.

இவ்விழாவில் அளவெட்டி அறிவகத்தினால் நடாத்தப்பட்ட கணனிப் பாடநெறிகளில் சித்திபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கள், லண்டன் மக்கள் சங்க அனுசரணையிலான வாழ்வாதார உதவித்திட்டங்கள் கையளித்தல் மற்றும் அளவெட்டிப் பிரதேச பாடசாலைகள் மற்றும் கோண்டாவில் இராமகிருஷ்ணா வித்தியாலயம் என்பவற்றுக்கான நூல்கள் வழங்கல் என்பன இடம்பெறவுள்ளதாக அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .