2025 ஜூலை 07, திங்கட்கிழமை

விபத்தில் தாயும் மகனும் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 28 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

யாழ். சாவகச்சேரிப் பகுதியில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதால்,  மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகனும் படுகாயமடைந்த நிலையில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இரவு வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச்  சேர்ந்த மரியநாயகம் செல்வமணி (வயது 67), மரியநாயகம் மரியதாஸ் (வயது 47) ஆகியோரே படுகாயமடைந்தனர்.

இவர்கள் உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் இன்று திங்கட்கிழமை (28) பொலிஸார் கூறினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .