2025 ஜூலை 07, திங்கட்கிழமை

குழுச்சண்டையில் ஈடுபட்டவர்களுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 ஜூலை 28 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்., புத்தூர் கிழக்குப் பகுதியில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற குழுச் சண்டையுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்யப்பட்ட 11 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை உத்தரவிட்டார்.

அதேயிடத்தினைச் சேர்ந்த 11 சந்தேகநபர்களே, அச்சுவேலிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, மேலதிக நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்திய வேளையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி பகுதியில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஊர்வலம் ஒன்றில் வெடி கொழுத்தப்பட்டமை தொடர்பில் இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு இடம்பெற்றது.

இதில் 9பேர் காயமடைந்து பருத்தித்துறை மற்றும் யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றனர். இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வந்த அச்சுவேலி பொலிஸார், சந்தேகத்தின் பேரில் 11 சந்தேகநபர்களை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .