2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நான்கு பாடசாலைகளில் கட்டிடங்கள் திறப்பு

Gavitha   / 2014 ஜூலை 28 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு பாடசாலைகளில் புதிதாக அமைக்கப்பட்ட ஆசிரியர் விடுதி மற்றும் வகுப்பறைக் கட்டிடத் தொகுதிகள் என்பன கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் இன்று திங்கட்கிழமை (28) திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் கொய்க்கா (முழiஉய) நிறுவனத்தினால் 37 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட 4 ஆசிரியர் விடுதிகள், கோணாவில் அரசினர் தமிழ் கலவன், தர்மபுரம் மத்திய கல்லூரி, பிரமந்தனாறு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் தலா 55 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட கணிணி ஆய்வுடம் மற்றும் நூலகத்துடன் இணைந்த வகுப்பறைக் கட்டிடத் தொகுதிகள் ஆகியனவும் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் முருகேசு சந்திரகுமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .