2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பனைமரம் தறித்தவர்கள் கைது

Menaka Mookandi   / 2014 ஜூலை 28 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்., வல்வெட்டித்துறை மானங்கனைப் பகுதியில் அனுமதி பெறாமல் பனை மரத்தினைத் தறித்துக்கொண்டிருந்த அதேயிடத்தினைச் சேர்ந்த 55 மற்றும் 68 வயதுடைய இரு சந்தேகநபர்களை, திங்கட்கிழமை (28) மதியம் கைது செய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இரு சந்தேகநபர்களும் கிராமஅலுவலரின் அனுமதியினைப் பெறாமல் பனை மரம் ஒன்றினைத் தறித்துக்கொண்டிருந்த போது, இது தொடர்பில் அப்பகுதி பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இருவரையும் கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .