2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கோழித் திருடர்களுக்கு பிணை

Menaka Mookandi   / 2014 ஜூலை 28 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்., ஊர்காவற்றுறை, நாரந்தனைப் பகுதியிலுள்ள வீடொன்றில் வெள்ளிக்கிழமை (25) இரவு 11 கோழிகளைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் தலா 25 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் திங்கட்கிழமை (28) உத்தரவிட்டார்.

அத்துடன், இந்த வழக்கினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதவான், சந்தேகநபர்கள் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் ஊர்;காவற்றுறைப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையொப்பமிடவேண்டும் எனவும் நீதவான் கூறினார்.

மேற்படி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 11 கோழிகள் கடந்த வெள்ளிக்கிழமை (25) இரவு திருட்டுப்போயிருந்தன. இது தொடர்பில் உரிமையாளர் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை (26) முறைப்பாடு பதிவு செய்தார்.

விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) அதேயிடத்தினைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களைக் கைது செய்தனர். சந்தேகநபர்களிடமிருந்து 3 கோழிகளையும் மீட்டனர்.

தொடர்ந்து, மேற்படி இரு சந்தேகநபர்களையும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று (28) ஆஜர்ப்படுத்தினர். இதன்போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .