2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்வாதாரப் பயிற்சி

Menaka Mookandi   / 2014 ஜூலை 28 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்வாதாரப் பயிற்சியளிக்கும் 6 மாதகாலப் பயிற்சி நெறிகள், கிளிநொச்சி தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று திங்கட்கிழமை (28) முதல் ஆரம்பமாகியதாக சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

உலக வங்கியின் 5.5 மில்லியன் ரூபா நிதியுதவியில் சமூக சேவைகள் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் இந்தப் பயிற்சி நெறியில் தையல் பயிற்சி மற்றும் தொலைபேசி திருத்தல் பயிற்சி என்பன முன்னெடுக்கப்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளில் தலா 20 பேர் வீதம் இந்த இரண்டு பயிற்சி நெறிக்குமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கிளிநொச்சி தொழில்நுட்பக் கல்லூரியில் விடுதி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பயிற்சி நெறியின் மூலம் மாற்றுத் திறனாளிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான தொழில் ஒன்றினை ஏற்படுத்த முடிவதுடன், மாற்றுத் திறனாளிகளின் எதிர்காலத்தினையும் வளப்படுத்திக் கொள்ளவும் முடிகின்றது.

பயிற்சியின் போது நாளாந்தம் 110 ரூபா ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும் அதேவேளை, பயிற்சி நிறைவில் 10,000 ரூபா பெறுமதியான சுயதொழில் உபகரணங்களும், அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் பொருத்தமான சுயதொழில் உதவிகளும் வழங்கப்படவுள்ளதாகத் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்றைய ஆரம்பநாள் நிகழ்வில் சமூக சேவைகள் அமைச்சின் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத் திட்டப் பணிப்பாளர் வி.இராமமூர்த்தி, சமூக சேவைகள் அமைச்சின் கிளிநொச்சி மாவட்ட உத்தியோகஸ்தர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .