2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூலை 30 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்,ரொமேஷ் மதுசங்க ,நவரத்தினம் கபில்நாத்

யாழ். மாதகல் பகுதியிலுள்ள வீடொன்றில் 16 கிலோ கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் 35 வயதுடைய ஒருவரை வவுனியாவிலிருந்து வந்த விசேட பொலிஸ் பிரிவினர் நேற்று செவ்வாய்க்கிழமை (29) கைதுசெய்து கொண்டு சென்றதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவரிடமிருந்து கஞ்சாவை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

கடந்த ஜுன் மாதம் வவுனியாவில் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட  நபர் ஒருவர் வழங்கிய  தகவலின் அடிப்படையில்  இச்சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த நிலையில், இச்சந்தேக நபரை வவுனியா பொலிஸ் பிரிவின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டுசென்றதாகவும் பொலிஸார் கூறினர்.

மாதகல் பகுதியில் 132 கிலோ கஞ்சாவை  கடந்த ஜுன் மாதம் கைப்பற்றியதுடன், இது தொடர்பில் அதேயிடத்தைச் சேர்ந்த இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .