2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஆடி நல்ல மாதம்; குருகுலராஜா

Suganthini Ratnam   / 2014 ஜூலை 30 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


- ற.றஜீவன், வி.தபேந்திரன்

நாட்டில் ஆடி மாதம் ஏற்பட்ட இன வன்முறையால் ஆடி மாதத்தை கூடாத மாதம் என்று தமிழர்கள் நினைக்கின்றனர்.  ஆனால், அது அப்படி இல்லை என வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா  தெரிவித்தார்.

ஆடி மாதத்தில் ஆடிப்பிறப்பை கொண்டாடுவதுடன்,  ஆடி அமாவாசை விரதத்தை அனுஷ்டிப்பதாகவும் அவர் கூறினார்.

வடமராட்சி கல்வி வலயத்தில் அமைந்துள்ள அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாலயத்தில் 300,000 ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை  இன்று புதன்கிழமை (30) திரைநீக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர்; மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'கிராமத்திலுள்ள பாடசாலைகள் பெரிய கட்டடங்களை கொண்டமைந்துள்ளன. ஆனால், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகின்றது. கிராமத்திலுள்ள வசதி படைத்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளை நகர்ப்புற பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர். இது தொடர்பில் பெற்றோர்களின் மனநிலையை   மாற்ற வேண்டும்.

முன்னைய காலங்களில் ஆசிரியர்கள் விசுவாசத்துடன் உழைத்தனர்.  ஒவ்வொரு மாணவர்களையும் தனித்தனியாக கவனித்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.  அதனால், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கினர்.  தற்காலத்தில் இவ்வாறான  செயற்பாடுகள் குறைவடைந்து காணப்படுகின்றன' என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .