2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2014 ஜூலை 31 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.நீர்வேலிப் பகுதியில் ரி.என்.ரி. வெடிமருந்துகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அதேயிடத்தினைச் சேர்ந்த ஆசைப்பிள்ளை சசீந்திரன் (வயது 36) என்பவர் புதன்கிழமை (30) இரவு கைதுசெய்யப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் ஜே.ஏ.எஸ்.எம்.கே. சமன் ஜெயசிங்க வியாழக்கிழமை (31) தெரிவித்தார்.

அத்துடன், மேற்படி நபரிடமிருந்து 23 கிலோ 270 கிராம் ரி.என்.ரி வெடி மருந்தினையும் மீட்டதாகப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

தமக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சந்தேகநபர் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருவதாகவும் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .