2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இத்தாலிக்கு அனுப்புவதாக கூறி பணமோசடி:கைது செய்ய உத்தரவு

Gavitha   / 2014 ஜூலை 31 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இத்தாலிக்கு அனுப்பி வைப்பதாக கூறி, வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த 28 வயது இளைஞனிடம் 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபா பணமோசடி செய்த சந்தேகநபரைக் கைது செய்யுமாறு, பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலன், காங்கேசன்துறைப் பொலிஸாரிற்கு இன்று வியாழக்கிழமை (31) உத்தரவிட்டார்.

இது பற்றித் தெரியவருவதாவது,

ஆதிகோவிலடியினைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் இத்தாலி செல்வதற்காக கொழும்பு 7ஐ சேர்ந்த ஒருவரிடம் 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார்.

எனினும், பணத்தினைப் பெற்றுக்கொண்டவர், இவரை இத்தாலிக்கு அனுப்புவதற்கான எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், பணத்தைக் கொடுத்த நபர் கடந்த 22ஆம் திகதி காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதற்கிணங்க காங்கேசன்துறைப் பொலிஸார், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
மேற்படி வழக்கு இன்று வியாழக்கிழமை (31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இவ்வுத்தரவினைப் பிறப்பித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .