2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: விடுமுறையில் சென்ற சிப்பாய்களை ஆஜர்படுத்தும்படி உத்தரவு

Thipaan   / 2014 ஜூலை 31 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், எம்.றொசாந்த்

யாழ். காரைநகர் ஊரிப் பகுதியில் சிறுமியொருவர் கடற்படை வீரரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்குத் தொடர்பில், குறித்த ஏலாரை முகாமில் இருந்து விடுமுறையில் சென்றுள்ள 2 கடற்படைச் சிப்பாய்களையும் அடுத்து முறை வழக்கு எடுத்துக்கொள்ளும் போது ஆஜர் செய்யுமாறு ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு, யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, வியாழக்கிழமை (31) உத்தரவிட்டார்.

அத்துடன், மேற்படி வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

மேற்படி வழக்கு இன்று (31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 7 கடற்படைச் சிப்பாய்களும் மன்றில் ஆஜராகியிருந்தனர். எனினும், சிறுமி சார்பாக எவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.

இந்நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பான தொடர் அறிக்கையை ஊர்காவற்றுறை பொலிஸார், மன்றில் இன்றும் (31) சமர்ப்பித்திருந்தனர்.

பாடசாலை செல்லும் இச்சிறுமியை, கடற்படை வீரர் ஒருவர் ஏலாரை கடற்படை முகாமுக்குள் அழைத்துச் சென்று 11 நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் இம்மாதம் 15ஆம் திகதி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.
 
இந்த முறைப்பாட்டிற்கமைய ஊர்காவற்றுறைப் பொலிஸார், யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .