2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கொடியேற்றத்தின் போது சங்கிலி அறுத்தவர் கைது

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பாகிய நிலையில்,  ஆலய உள்வீதியில் நின்றிருந்த வயோபதிப் பெண்ணொருவரின் கழுத்திலிருந்த சங்கிலியினை அறுத்த  இளைஞனைக் கைதுசெய்ததாகப் யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணின் 4 பவுண் சங்கிலியினை மேற்படி சந்தேகநபர் அறுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் அங்கு சிவில் உடையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இளைஞனைக் கைதுசெய்தனர்.

மேற்படி சந்தேகநபர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .