2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

காரைநகர் பல்தொகுப்பு நிலைய கட்டுமானப் பணிகளை டக்ளஸ் பார்வை

Thipaan   / 2014 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


காரைநகரில் பனை அபிவிருத்தி சபையினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பனம்சார் பல்தொகுப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (01) நேரில் பார்வையிட்டுள்ளார்.

காரைநகருக்கு  விஜயம் செய்த அமைச்சர் குறித்த கடடடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அதன் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்ந்தார்.

இப்பனம்சார் பல்தொகுப்பு நிலையத்தின் ஊடாக பனந் தொழிற்றுறை சார்ந்த பல்வேறு தொழிற்றுறைகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

குறிப்பாக பனையோலை, பனங்கிழங்கு, தும்பு மற்றும் மரம் உள்ளிட்டவற்றை மூலப்பொருட்களாகக் கொண்டு செய்யப்படவுள்ள உற்பத்திகள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இதனிடையே குறித்த நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் மரங்களை நடுகை செய்வது மற்றும் நிலையத்தைச் சூழ நிரந்தரமாக வேலியை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமைச்சர்; விசேட கவனம் செலுத்தினார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக, அவரது அமைச்சின் கீழான நிறுவனங்களில் ஒன்றான பனை அபிவிருத்தி சபையினால் நிர்மாணிக்கப்பட்ட நிலையத்தின் ஊடாக பனந்தொழிற்துறைசார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுவதால், கைப்பணி மற்றும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்துறைகளை மேம்படுத்த முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம், ஈ.பி.டி.பியின் சர்வதேச இணைப்பாளர் மித்திரன், ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச இணைப்பாளர் வீ.கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .