2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஆயிரம் மாணவர்களுக்கு உதவிகள்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 03 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மக்களின் உதவிகள் மூலம் வடமாகாணத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள 1000 மாணவர்களுக்கு உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு  கூறினார்.

மேற்படி உதவிகள் வழங்குவதற்கான மாணவர்களை, வடமாகாணக் கல்வி அமைச்சினூடாகத் தெரிவு செய்து உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த உதவி வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு கலந்துரையாடலொன்று ஜேர்மனியில் நடைபெற்றதாகவும் அதில் தான் கலந்துகொண்டதாகவும் அவர்  தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .