2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நீர் இறைக்கும் இயந்திரங்கள் திருட்டு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 03 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருவேறு இடங்களில் தோட்டத்திற்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் இரண்டு நேற்று சனிக்கிழமை (02) இரவு திருடப்பட்டுள்ளதாக அவற்றின் உரிமையாளர்களினால் ஞாயிற்றுக்கிழமை (03) காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுப்பிட்டி மேற்கு இராச வீதியிலுள்ள தோட்டக் கிணற்றில் பூட்டப்பட்டிருந்த 16,000 ரூபாய் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரமும் அச்செழு வடக்குப் பகுதியிலுள்ள தோட்டக் கிணற்றில் பூட்டப்பட்டிருந்த 18,000 ரூபாய்  பெறுமதியான  இயந்திரமும் திருடப்பட்டுள்ளன.

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .