2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இலவச மருத்துவ முகாமும் கருத்தரங்கும்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 03 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


யாழ்.தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலய முன்னால் அதிபர் மறைந்த மணியம் கணபதிப்பிள்ளையின் 7ஆம் ஆண்டு நினைவினையொட்டி அவரிடம் கல்விகற்ற மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட இலவச மருத்துவ முகாம் மற்றும் 5 ஆம் தர மாணவர்களிற்கான கல்விக் கருத்தரங்கு ஆகியன ஞாயிற்றுக்கிழமை (03) சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இம் முகாமில் கண்; மற்றும் பொது வைத்தியம் ஆகியவற்றுக்கான சிகிச்சைகளை யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் வழங்கினார்கள். இதில் 100இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

5ஆம் தர பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கருத்தரங்கில் 360 மாணவர்கள் பங்குபற்றியிருந்ததுடன், அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் கற்பிக்கும் பிரபல்யமான ஆசிரியர்கள் கருத்துரைகளை வழங்கினார்கள்.

மேற்படி அதிபரின் நினைவாக வருடாவருடம் விளையாட்டு விழாவாக நடத்தி வந்ததாகவும், இம்முறை அதில் மாற்றங்கொண்டு வரப்பட்டு, மருத்துவ முகாம் மற்றும் கருத்தரங்குகள் ஆகியன நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .