2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இணைப்பாடவிதான செயற்படுகளில் மாணவர்களை ஈடுபடுத்த தீர்மானம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 04 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

மாணவர்களை கல்வியுடன் இணைந்த வகையில் இணைப்பாடவிதான செயற்படுகளிலும் ஈடுபடுத்த வேண்டும் என்று, வடமாகாண அதிபர் சங்கத்தின் பொதுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக வடமாகாண அதிபர் சங்கத் தலைவர் எஸ்.சிவநேஸ்வரன் திங்கட்கிழமை (04) தெரிவித்தார்.
 
வடமாகாண பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாக வடமாகாண அதிபர் சங்கத்தின் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக சிவநேஸ்வரன் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில், வடமாகாணப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான கருத்துக்கள் பாடசாலை அதிபர்களினால் முன்வைக்கப்பட்டன.

மேலும், அதிபர்கள் - பணிப்பாளர்களுக்கு இடையேயான புரிந்துணர்வையும், நட்பையும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுப்பதன் ஊடாக பாடசாலை முகாமைத்துவத்தினை வலுப்படுத்த முடியும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

பாடசாலைகளில் அதிகளவு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும், அதிபர்களின் நிர்வாக நிதி, முகாமைத்துவ செயற்பாடுகளை வலுப்படுத்தி அதனூடாக பாடசாலைக் கல்வியை வலுப்படுத்துல், அதிபர்கள் தமக்கிடையிலான தொடர்புகளினை வலுப்படுத்துவதுடன், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதன் மூலம் பாடசாலைகளை வலுப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

வடமாகாணப் பாடசாலைகளை ஒன்றிணைத்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கல்வி மாநாடொன்றை நடத்துவதினூடாக, பாடசாலை கல்வியில் காணப்படும் தேக்க நிலைக்கு பொருத்தமான தீர்வுகளைக் காண்பது என்ற தீர்மானங்களுடன், மாணவர்களை கல்வியுடன் இணைந்த வகையில் இணைப்பாடவிதான செயற்படுகளில் ஈடுபடுத்த வேண்டும் என்ற தீர்மானமும் அதிபர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .