2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஆரோக்கிய வாழ்வு தொடர்பான விழிப்புணர்வு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா, பொ.சோபிகா


யாழ். மாவட்ட செயலக நலன்புரிக்கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான ஆரோக்கிய வாழ்வு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (04) இடம்பெற்றது.

இந்நிகழ்வு யாழ். போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் அனுசரணையில், மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பொது வைத்திய நிபுணர் எஸ்.சிவன்சுதன், யாழ்.போதனா வைத்தியசாலை சிரேஷ்ட பதிவாளர் வைத்தியர் பி.மயூரதன் உள்ளிட்ட வைத்தியர்கள் கருத்துரைகளை வழங்கினார்கள்.

நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் என்ன என்பது தொடர்பாகவும், கட்டுப்படுத்தக்கூடிய வழிவகைகள், எவ்வாறான உணவு வகைகளை கைக்கொள்ள வேண்டும், அதற்கான சிகிச்சை முறைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன், நீரிழிவு நோய் தொடர்பாக உத்தியோகத்தர்களினால் கேட்கப்பட்ட வினாக்களுக்கும் வைத்தியர்கள் விடையளித்தனர்.

மேலும் நீரிழிவு தொடர்பான இலவச மருத்துவப் பரிசோதனைகளும் இடம்பெற்றன. இந்த மருத்துவப் பரிசோதனை நாளை செவ்வாய்க்கிழமையும் (05) இடம்பெறுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .