2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வடமாகாண பிரதம செயலாளருக்கு சி.வி.கே. எச்சரிக்கை

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 06 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

யோ.வித்தியா, எம்.றொசாந்த், பொ.ஷோபிகா

'வடமாகாண சபையால் அழைப்பு விடுக்கப்பட்டும் அமர்வுக்கு வருகை தராமல் சபையையும், முதலமைச்சரையும் உதாசீனம் செய்யும் அமைச்சின் செயலாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்தக் கூட்டத் தொடர் (13 ஆவது) கைதடியில் அமைந்துள்ள வடமாகாணசபைக் கட்டடத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்றது.

இந்த அமர்வில் வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நிதி நியதிச்சட்டம், முதலமைச்சர்; நியதிச்சட்டம் மற்றும் முத்திரை வரி கைமாற்றல் சட்டம் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவைத் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவைத்தலைவர், இந்த விவாதத்தின் போது, கட்டாயமாக வடமாகாண பிரதம  செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் கலந்துகொண்டிருக்க வேண்டும். இது தொடர்பில் சபையால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர் வருகை தரவில்லை. இது சபையையும், முதலமைச்சரையும் அவைத்தலைவரையும் அவமதிக்கும், உதாசீனம்   செய்யும்   செயல் ஆகும் என்றார்.

வடமாகாண சபையின் இன்றைய (05) அமர்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமர்வாகும். வடமாகாண சபையினராகிய நாங்கள், அதிகாரிகளுடன் அன்பாக நடக்கவோ முற்படுகின்றோம். ஆனால் அவர்கள் அவ்வாறு நடந்துகொள்வதில்லை. பிரதம   செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், அவர் தான் வராததற்கான காரணத்தைக்கூட சபைக்குத் தெரியப்படுத்தியிருக்கவில்லை.

பிரதம  செயலாளர் வருகை தராமையால் நான் இந்தச் சபையை ஒத்தி வைத்திருக்க முடியும். இருந்தும் அது காலத்தை வீணடிக்கும்  செயல். யார் உதாசீனம்  செய்தாலும், இந்தச் சபையை வெற்றிகரமாகக் கொண்டு செல்;ல எங்களால் முடியும். எமது இலக்கை நோக்கி நாங்கள் பயணிப்போம்.

பிரதம  செயலாளர் இல்லாவிட்டாலும், இந்த நியதிச் சட்டங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்று எங்களுக்குத் தெரியும். நிர்வாக ரீதியில் நாங்களும் தெளிவுபெற்றவர்கள். இங்கிருக்கும் நிர்வாக அதிகாரிகளில் நான் மூத்தவன். ஆகையால் நிர்வாகத்தில் இருக்கும் சுழிவு நெளிவினை நான் நன்கு அறிவேன் என்றும் அவைத் தலைவர் கூறினார்.

வடமாகாண சபையை உதாசீனம் செய்பவர்;களுக்கு எதிராக சிறப்புரிமை மீறல் மூலம் சட்டநடவடிக்கை எடுக்கலாம். நாம் எவ்வாறு ஆளுநருடன் இணக்கமாகச் செல்கின்றோமே அவ்வாறு அதிகாரிகளும் இருந்தால் நன்றாக இருக்கும். இந்த அவையின் மூலம் அனைத்துச்  செயற்பாடுகளை சீராக முன்னெடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0

  • CBV RAJU Wednesday, 06 August 2014 08:28 AM

    என்ன செய்தீர்..?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .