2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

திருட்டு: சிறுவன் சைவச்சிறுவர் இல்லத்தில் தடுத்து வைப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 06 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

யாழ்.புத்தூர் வதாரவத்தையிலுள்ள குடும்பநல உத்தியோகத்தரின் அலுவலகத்தினை உடைத்து அங்கிருந்த 4000 ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடிய 14 வயதுச் சிறுவனை எதிர்வரும் 8 ஆம் திகதி வரையில் திருநெல்வேலி சைவச் சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்கும்படி யாழ்.சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி செவ்வாய்க்கிழமை (05) உத்தரவிட்டார்.

அத்தினத்தில், சிறுவனின் பெற்றோரையும் மன்றிற்குச் சமூகமளிக்கும்படியும் நீதவான் உத்தரவிட்டார். 

மேற்படி குடும்பநல உத்தியோகத்தரின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) இரவு பொருட்கள் திருடப்பட்டிருந்தமை தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட அச்சுவேலிப் பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அதேயிடத்தினைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவனை கைதுசெய்தனர்.

தொடர்ந்து,  செவ்வாய்க்கிழமை (05) மாலை மேற்படி சிறுவன் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .