2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மறைவில் இருந்து வெளிப்பட்ட நம்நாடு தமிழீழம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகரத்தினம் கனகராஜ்


யாழ்.நெல்லியடிப் பழைய பேருந்து நிலையத்தின் சுவரில் எழுதப்பட்டிருந்த 'நம்நாடு தமிழீழம்' என்ற வாசகம் சுவரிலிருந்த சுவரொட்டிகள் உரிக்கப்பட்ட போது தென்பட்டுள்ளது.

மேற்படி பேருந்து நிலையத்தினை திங்கட்கிழமை (04) முதல் குஞ்சர்கடை எல்லாங்குளம் இராணுவ முகாமினைச் சேர்ந்த இராணுவத்தினர்; துப்பரவு செய்து வருகின்றனர்.

இதன்போது, சுவரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி உரிக்கப்பட்ட போது முன்னொரு காலத்தில் எழுதப்பட்டிருந்த மேற்படி வாசகம் தென்பட்டுள்ளது.

மேற்படி பேருந்து நிலையத்திற்கு வர்ணம் பூச்சும் நடவடிக்கையினையும் மேற்கொள்ளவிருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .