2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆற்றில் மண் அள்ளியவர்கள் கைது

Thipaan   / 2014 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

அனுமதியின்றி உழவு இயந்திரத்தின் மூலம் முல்லைத்தீவு தேவிபுரம் ஆற்றில் மண் அள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நால்வரை புதன்கிழமை (06) கைது செய்ததாக புதுக்குடியிருப்பு பொலிஸார் வியாழக்கிழமை (07) தெரிவித்தனர்.

அத்துடன், மண் அள்ளுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உழவுஇயந்திரங்கள் நான்கும் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .