2025 ஜூலை 07, திங்கட்கிழமை

யாழ். மன்னர்களின் சிலை திறப்பு விழாவுக்கு அழைப்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் ஆகஸ்ட் பத்தாம் திகதி பொன் மாலை 3.00 மணிக்கு மூன்று தமிழ் மன்னர்களுக்கு சிலை நிறுவும் விழா நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுர சுற்று வட்டத்தில் தமிழ் மன்னர்களான பண்டார வன்னியன், எல்லாளன், பரராஜசேகரன் ஆகியோரின் திருவுருவச் சிலைகள் நிறுவப்படவுள்ளன.

தமிழ் மன்னர்களின் சிலைகளை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா திறந்து வைக்கின்றார்.

இந்த மாபெறும் வரலாற்று நிகழ்வில் சலக மதப்பெரியோர்களும், கலை, கலாசாரம் சார்ந்த அறிஞர்களும், கல்விமான்களும், சமூக ஆர்வலர்களும், சமூகப் பெரியார்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்விழாவிற்கு தமிழ் உணர்வோடு அனைவரும் கலந்துகொள்ள அணிதிரண்டு வருமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். மக்கள் வெள்ளத்தில் மிதந்த படி நமது மன்னர்களின் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று நிறுவுவதே அம்மன்னர்களுக்கு நாம் செய்யும் பெரு மரியாதையாகும்.

அன்புக்குரியவர்களே இந்தச் செய்தியை தனிப்பட்ட அழைப்பாக பெரு மனதோடு ஏற்றுக்கொண்டு பத்தாம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கவும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி கோரியுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .