2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்ற மூவருக்கும் பிணை

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சட்டவிரோத மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட யாழ்.சிறுப்பிட்டியினைச் சேர்ந்த மூவரையும் தலா 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா ஞாயிற்றுக்கிழமை (10) உத்தரவிட்டார்.

அத்துடன், இது தொடர்பிலான வழக்கினை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மின்சாரம் பெறுபவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் சுன்னாகம் மின்சார நிலையத்தினைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து அச்சுவேலிப் பொலிஸ் நிலையப் பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது, சனிக்கிழமை (09) இரவு சிறுப்பிட்டிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மின்மானியில் கம்பி செருகிய ஒருவரும் திருட்டுத்தனமாக மின்சாரம் பெற்ற இருவருமாக மொத்தம் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரும் நீதவான் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (10) ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போதே நீதவான் மேற்படி உத்தரவினை பிறப்பித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .